சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலையோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் வாகனஓட்டிகள் சாலைகளில் பயணிக்கும் போது முட்களால் காயமடைகின்றனர். மேலும் இந்த சீமைக்கருவேல மரங்களால் சாலையில் பயணிக்க இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.