குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-11-01 12:44 GMT

புலியூர்சாலை மற்றும் மான்கோடு கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மரவள்ளி , தென்னை பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும், குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை அள்ளிச் செல்கின்றன. அவற்றை விரட்டினால் கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். எனவே, மேற்கூறிய பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிஜின், மாங்கோடு.

மேலும் செய்திகள்