தேனி மயிலாடும்பாறை அருகே பஞ்சந்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் தூர்வாரப்படாமல் மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை உடனடியாக தூர்வார வேண்டும்.