புதிய வாய்க்கால் பாலம் வேண்டும்

Update: 2026-10-25 17:10 GMT

கம்பம் அருகே உள்ள அண்ணாபுரத்தில் சின்ன வாய்க்கால் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் இல்லை. அதோடு பாலமும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்