பொதுமக்கள் அச்சம்

Update: 2026-10-25 16:28 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெரு நாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்வதால் பொதுமக்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து சாலையில் விளையாடும் குழந்தைகளை கடிக்கின்றது. எனவே தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்