கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் பொது பிரச்சினையாக தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. ஆங்காங்கே தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதேபோல் தெருக்களில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை துரத்தி கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.