‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-10-25 15:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்கள் கழிவறை கதவு இல்லாமலும், மோசமான நிலையிலும் இருந்ததால், மாணவர்கள் கழிவறையை பயன்படுத்துவதில் சிரமப்படுவதுடன், சுகாதார பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை தூய்மைப்படுத்தி, கதவு அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்