சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை துரத்தி சென்று கடிப்பதுடன் விபத்தையும் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதியினர் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.