விபத்து அபாயம்

Update: 2026-10-25 16:54 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சில வாகன ஓட்டிகள் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், எதிரே செல்லும் பிற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மேற்கண்ட பகுதியில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்