சேலம் 4 ரோடு வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த பகுதியில் கடைகள், பள்ளிகள் அமைந்துள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இந்தநிலையில், இரவு நேரங்களில் 4 ரோடு பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முன்வருவார்களா?