தடுப்புச்சுவரால் விபத்து

Update: 2026-10-25 15:04 GMT

ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டுக்குட்பட்ட பகுதியான கற்பகம் லேஅவுட் 1-வது வீதிக்கும், 37-வது வார்டுக்குட்பட்ட பகுதியான கந்தசாமி செட்டி 2-வது வீதிக்கும் நடுவே நெடுஞ்சாலைத்துறையால் தடுப்புச்சுவர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 2 வார்டுகளில் இருந்தும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பள்ளிகள் இருப்பதால் ஒரு வழிப்பாதை வழியாக சிலர் செல்கின்றனர். இதனால் விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே தடுப்புச்சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி