கொசுத்தொல்லை

Update: 2026-10-25 14:35 GMT

அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரியலூரில் உள்ள குறிஞ்சான் குளத்தெரு, வெள்ளாழத்தெரு, பாரதி நகர், சடையப்பர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி சார்பிலும், ஊராட்சி சார்பிலும் கொசு மருந்து அடித்து கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி