அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புறம் ஒரு ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தை சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ்,சந்தையடி.