கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் கால்ப் லிங்க்ஸ் மற்றும் அட்டவளை பகுதிகளில் ஆபத்தான நிலையில் மரங்கள் உள்ளன. இவை கனமழை பெய்யும்போது சாலையில் சரிந்து விழ வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அவற்றின் கிளைகள் முறிந்து விழுந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.