பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வனத்துறை அலுவலகத்தை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கழிப்பிடம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. அது முறையாக பராமரிப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நிலவுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.