தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2026-10-25 10:01 GMT

கோவை பாலக்காடு சாலையில் சுகுணாபுரம் அருகே சிறு மழை பெய்தால் கூட மழைநீர் குளம் போல் தேங்கிவிடுகிறது. அத்துடன் வீடுகளுக்குள் மழைநீர் புகும் சம்பவங்கள் நடக்கிறது. மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைநீரால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. சாலையில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்