மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விளம்பர பதாகைகள்

Update: 2026-10-25 14:34 GMT

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள கல்லூரிக்குச் சொந்தமான கட்டிடத்தின் உயரமான பகுதியில் அனுமதியின்றி அரசியல் கட்சியினர் விளம்பர பதாகைகளை வைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் பதாகைகள் அகற்றப்படாமல், அவற்றை வைப்பதில் கட்சியினரிடையே போட்டி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கவும், அனுமதியின்றி பதாகைகள் வைப்பதைத் தடுக்கவும் மருத்துவக் கல்லூரி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி