பராமரிக்கப்படாத மயானம்

Update: 2026-10-11 13:52 GMT

கோத்தகிரி கடைவீதி அருகே பொது மயானம் உள்ளது. இது உரிய பராமரிப்பின்றி புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனால் அங்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய செல்பவர்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. எனவே அந்த மயானத்தில் புதர் செடிகளை அகற்றி முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்