சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குரைப்பதும், கடிக்கும் வகையில் சாலைகளில் சுற்றி வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருவதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.