திருச்சி விமான நிலையம் வயர்லஸ் சாலையில் சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படுகின்றன. அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்வோர் அதிகளவில் இப்பகுதியில் இருந்து பஸ்களில் பயணம் செய்யும் நிலையில், இப்பகுதியில் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் சாலையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். எனவே அப்பகுதியில் கட்டண வாகன நிறுத்துமிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.