கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில், குறிப்பாக அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால் மாணவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இவை திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், பொதுமக்களையும் துரத்தி கடிக்க பாய்கிறது. எனவே மலைக்கோவிலூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.