பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் பல்வேறு கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர்கள் இல்லாததால், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக நடைபெறுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக ஊராட்சி செயலாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.