புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு பிரசவம் மற்றும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், வெளியே நிறுத்தும் பட்சத்தில் வாகனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே, மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதுடன், புறக்காவல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.