பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவாயில் எதிரே மகளிர் சுகாதார வளாகத்தை ஒட்டி வெட்டப்பட்ட மரக்கிளைகள் பல மாதங்களாக குவிந்து கிடந்தன. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து கொசுக்கள் மற்றும் விஷ உயிரினங்கள் நடமாடும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.