பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சிகூர் கிராமத்தில் இருந்து திருமாந்துறை செல்லும் சாலையோர மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. காற்றில் பதாகைகள் பறந்து விழுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.