கோவில் குடமுழுக்கு நடத்தப்படுமா?

Update: 2026-11-22 14:18 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தில் விஸ்வநாதர் - விசாலாட்சி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டும், 15 ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கோவில் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், கோவில்களில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி