பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.