பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், சந்து கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் சிலர் காலையிலேயே மது அருந்திவிட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.