மழைநீர் வடிகால் வசதி

Update: 2026-10-04 13:27 GMT

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட நெருஞ்சிக்கோரை கிராமத்தின் கிழக்குத்தெருவில் மழைநீர் வடிகால் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சின்னேரிக்கு செல்லும் வகையில் இருந்த வடிகால் மூடப்பட்டுள்ளதால், மழைநீர் சின்னேரிக்கு செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், ஊரைச் சுற்றிலும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்