விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்திச் சென்று கடிப்பதால் அப்பகுதியினர் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இந்த நாய்களால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?