திருவள்ளூர் மாவட்டம், கண்ணபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அருணாசல நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சமீபகாலமாகத் தெருநாய்களின் தொல்லை கணிசமாக அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரியும் நாய்கள், அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் பயங்கரமாகக் கடிக்கத் துரத்துகின்றன. இதனால் பலர் கீழே விழுந்து காயமடைவதுடன், நிம்மதியாக வெளியே சென்று வர முடியாத அவல நிலை நீடிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.