திருச்சி மாநகராட்சி 49-வது வார்டு ஹனீபா காலனி பகுதியில் தெருப்பெயர் பலகை இல்லாததால் வெளியூர்களில் இருந்து வருவோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். டெண்டர் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் உடனடியாக தெருப்பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.