ஆரல்வாய்மொழி வடக்கூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சேதமடைந்து சுற்றுச்சுவரை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், ஆரல்வாய்மொழி.