தெருநாய்களால் பொதுமக்கள் அவதி

Update: 2026-09-13 14:52 GMT

தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் கூட்டம், கூட்டமாக சாலையோரங்களில் அவை சுற்றித் திரிகின்றன. அதோடு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளை துரத்திச்சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்களை உடனடியாக பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்