விருதுநகர் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் காலை அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.