விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?