கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கபாளையம் முத்துநகர் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முத்துநகர் பகுதியில் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றவரை சாலையில் படுத்திருந்த நாய் கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்தவருக்கு ரத்தம் கொட்டிய நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்துச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.