பண்ருட்டி கடலூர் சாலையில் காந்தி பூங்கா உள்ளது. இங்கு தினந்தோறும் பொதுமக்கள் நடைபயிற்சிக்காகவும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் வருகின்றனர். இந்நிலையில் இந்த பூங்காவில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் காதலர்கள் எல்லை மீறி தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த செயல்கள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. எனவே போலீசார் பூங்காவில் அநாகரிக செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.