கடலூர் அடுத்த கோண்டூர் ஊராட்சி வி.எஸ்.எல். நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளித்தது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று தூர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.