புதிய சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2026-09-06 15:29 GMT

பனமரத்துப்பட்டி அருகே பெரமனூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் பள்ளிதெருப்பட்டி, சந்தியூர் ஆட்டையாம்பட்டி, நத்தமேடு, பெரமனூர், களரம்பட்டி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பலனடைந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதம் அடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள பனமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்களும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பெரமனூரில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்