திருச்சி மாவட்டம் திருத்தலையூர் கிராமம் குடித்தெரு பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்துடன் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். மேலும் அவை இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்வதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.