பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள பென்னாகரம்-நாகமரை பிரதான சாலையில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பதும், குறைப்பதும் என பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இதனால் இந்த சாலையை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தினம் தினம் விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாமே!