பொதுமக்கள் அச்சம்

Update: 2026-09-06 12:33 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சின்னகடை பஜார் கன்னமார்கோவில் தெரு அருகே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், குறிப்பாக சாலையில் விளையாடும் குழந்தைகளை துரத்தி சென்று கடிக்கின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துவதால் சம்பந்தப்பட்ட அதிகரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து முன்வருவார்களா?


மேலும் செய்திகள்