தேங்காப்பட்டணத்தில் இருந்து பெரியபள்ளிக்கு செல்லும சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கம்பம் பயன்பாடற்ற நிலையில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பீர் முகம்மது, தேங்காப்பட்டணம்.