சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்துக்கு உள்ளே ஆங்காங்கே தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. சில சமயம் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை குரைத்து, கடிக்க வருகின்றன. இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.