அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2026-09-06 10:30 GMT

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கோவில் வளாகம், முடி காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான சாய்தளப்பாதைகள் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை. சிறப்பு தரிசன பாதையில் நிழற்குடை வசதி இல்லாமல் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் காத்து நிற்கும் சூழல் நிலவுகிறது. எனவே, சாய்தள பாதைகள், நிழற்குடைகள் அமைப்பதுடன் சுகாதார வசதிகளையும் மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்