திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான ஏரி நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. கொப்பம்பட்டிக்கு வடமேற்கில் உள்ள பெரிய ஆற்றில் தடுப்பணை கட்டி, ஆழமான கால்வாய் வெட்டி மண்மலை அடிவாரம் வழியாக ஏரியுடன் இணைத்தால் மழைநீர் சேமிக்கப்பட்டு பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆற்றில் தடுப்பணை கட்டி ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.