கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை தெருநாய்கள் துரத்துவதால் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பாக பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.