பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் இயங்கி வரும் ஊர்ப்புற நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லாததால் தற்காலிக கட்டிடத்தில் இயங்கும் சூழல் உள்ளது. இதனால் நூலகத்தை பயன்படுத்தும் வாசகர்களும், மாணவர்களும் நிலையான வசதியின்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே வாசகர்களின் நலன் கருதி, நூலகத்திற்கு உரிய இடத்தை ஒதுக்கி சொந்த கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.