அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் கழிவறை வசதி எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, வி.கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே புதிய கழிவறை வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.